மூக்கடைப்பு நோய் (பினிசம்)

இந்நோயுற்றவர்கட்கு மூக்கில் ஒருவகை எரிச்சலும், நமைச்சலும் தாங்கமுடியாதவாறு உண்டாவதால் மூக்கின் துவாரங்கள் சிவந்து, கண்கள் சிவந்து, தும்மல், நீர் வடிதல் தலைவலி சளி, சீழ், இரத்தம் வடிதல் முதலியன ஏற்படும்.

இந்நோய் ஒன்பது வகைப்படும் என நூல்கள் கூறுகின்றன.

உணவு முதலியவை உடலுக்கு ஒவ்வாத நிலையில் உடலானது வெப்பமடைந்து பித்தம் அதிகமாகி ஐயத்தைப் பெருக்கக்கூடிய செய்கைகளால் ஐயம், பித்தத்துடன் சேர்ந்து இந்நோய் உண்டாகிறது. மேலும் மூலச்சூடு அதிகமாவதால் இந்நோய் தோன்றும்.

இந்நோயின் பொதுக்குணம்

மூலா தாரத்தில் வெப்பம் மிகுதியாகி கபாலத்தில் நீரை ஏற்றி ஒரு நாசி அடைத்து ஒரு நாசியில் நீர் வடியும். நாசியில் கட்டும்.

அடிக்கடி தும்மல் உண்டாகும். பிடரியும், தலையும் கனத்து கும். வாரந்தோறும் கபாலம் வறண்டு நீர் திரண்டு நாறும். தேகத்தில் வெதுப்புக்காணும், நாக்கில் ருசியும், மணமும் கெடும். சிரசு நீர் நெஞ்சில் இறங்கிக்கட்டும்.