கல்லீரல் (Liver) என்பது என்ன?

நம் சருமத்துக்கு அடுத்ததாக, உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்.தொட்டுப் பார்த்தால் பஞ்சு மாதிரி அத்தனை மிருது. கல்லீரலைக் குறுக்காகப் பிளந்து பார்த்தால், அதனுள்ளே ஆச்சர்யம் காத்திருக்கிறது. ஒரு தேன் கூடு போல் பல்லாயிரக்கணக்கான குழிகள் தெரிகின்றன.

     கல்லீரலின் வேலைகள் என்ன?

உடலுக்கு தேவையான வெப்பத்தை கல்லீரல் உற்பத்தி செய்கிறது. ரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், ரத்த நாளங்களுகளுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டியபொருட்களையும் உற்பத்தி செய்கிறது.அரிசி சோற்றில் உள்ள கார்போ ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தில் கலப்பதற்குக் குடல் பிரதேசத்தில் ஏற்பாடு செய்வதும் கல்லீரல்தான். அதே சமயம் சாப்பிட்ட சோறு முழுவதும் குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்துவிட்டாலும் ஆபத்துதான்.

     உணவில் உள்ள சத்துகள், உடலுக்கு தேவையான சத்துகளாக எப்படி மாறுகிறது?

பித்தநீரில் இருக்கிறது இந்த சூட்சுமம். (பித்தப்பை நீக்கப்பட்டவர்கள் நிலைமை என்ன ஆகும்? நீங்களே யோசிங்க) உணவு இரைப்பையை விட்டு இறங்கியதும், பித்தநீர் பித்தப்பையிலிருந்து வெளியேறி, முன்சிறுகுடலுக்கு வந்துவிடுகிறது. உணவிலிருக்கும் கொழுப்பைப் பிரித்துக் கூழ் போலாக்குகிறது. இப்போது அங்கு வந்து சேரும் கணைய நீரிலிருந்து ‘லைப்பேஸ் என்சைமை’ துணைக்கு அழைத்துக்கொள்கிறது. கொழுப்புச் சத்தை உறிஞ்சி எடுத்து ரத்தத்துக்குக் கொடுக்கிறது. இது போர்ட்டல் சிரை வழியாக கல்லீரலுக்குத்தான் வந்து சேருகிறது. அங்கு குளுக்கோஸ் எனும் சக்திப்பொருளாக மாற்றப்படுகிறது.

     ஏன் கல்லீரலுக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம்?

உடல் உறுப்புகளில் இதயத்தைத் தெரிந்த அளவுக்குக் கல்லீரலின் அற்புதம் அநேகருக்கும் தெரியாது. உடம்பை வளர்க்கவும் உயிரைக் காக்கவும் கடைசி வரை போராடும் கல்லீரல், தனக்கு பாதிப்பு வரும்போது அது குறித்த அறிகுறிகளை ஆரம்பத்தில் காட்டாது.

     கல்லீரல் கெட்டுப் போவதற்கான காரனங்கள் என்ன?

மது , ரசாயன மருந்துகள் அதிகமாக உட்கொள்ளல், இரவு 11.00 மணியில் இருந்து 3.00 வரை தூங்காமல் இருத்தல், முறையற்ற உணவு பழக்கம்

     கல்லீரலில் ஏற்படும் நோய்கள் என்ன?

வாயில் கசப்புச் சுவை,ருசியின்மை,வாயில் நீர் ஊறல்,பசியில்லாமை,உண்ட உணவு செரியாமை,காலையில் பித்தவாந்தி,முகத்தில் தேஜஸ் குறைதல்,முகம் வற்றி, எலும்புகள் தெரிதல்,வயிறு பெருத்து,கை கால் மெலிந்து போதல்,காய்ச்சல் இருத்தல் போன்ற குறிகள் தென்படும்.

     கல்லீரலில் நோய்களுக்கான மருந்துகள்

முள்ளங்கி வேகவைத்த சாறை வேளைக்கு 25 மி.லி ஆக ஒரு நாளைக்கு 2 வேளை குடிப்பதால் வலப்பாட்டு மற்றும் இடப்பாட்டு ஈரல் வீக்கம்,ஈரல் கட்டி முதலியவை குறையும்.