உடலில் தங்கும் கழிவுகள், குடலில் தங்கி உள்ள நாள்பட்ட கழிவுகள் மற்றும் விஷத்தன்மை உள்ள பொருட்கள் போன்றவற்றை நீக்குவதற்காக பேதி மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த பேதி மருந்தைப் பற்றி கோரக்கர் தனது "ரவிமேகலை" நூலில் "பேதிகல்பம்" என்ற பெயரில் அருளியிருக்கிறார்.
சித்தமுடன் குமரிமடல் பெரிதா யைந்து
சீவிய தன்னமோர் முடாவி லிட்டு
வித்தகமாய்க் கடுக்காய்த்தூள் பலமுந் தாக்கிப்
பிசைந்திடவே செயநீராய் நீர்த்துப் போகும்
சுத்தமுடன் வடிகட்டித் தேசிச் சாற்றுத்
துளிபத்து இட்டுவண்ணப் பேதி யாகிப்
பித்தமுடன் வாத ஐயபேதம் நீங்கும்
பிசகாமல் முக்காலை யருந்தல் நன்றே.
நம் சித்தர்கள் வருடம் இருமுறை கட்டாயம் இதை சாப்பிட அறிவுறுத்து கிறார்கள், எனினும் நோயின் வீரியம் பொருட்டு சில நாட்கள், வைத்தியர்களின் ஆலோசனையின் படி தொடர்ந்து சாப்பிடவும் சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
பேதி மருந்து எடுக்கும் நாள், நம் குடல் ஓய்வு எடுக்கும் நாள்.
காலை சூரிய உதயத்திற்கு முன்போ அல்லது மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகோ சாப்பிட வேண்டும்.
சாப்பிட்டவுடன் சுடுநீர் அருந்தவேண்டும். பிறகு சில அடிதூரம் நடந்த பின் மீண்டும் சுடுநீர் அருந்தவேண்டும். பேதியாக ஆரம்பித்தவுடன் மீண்டும் சுடுநீர் அருந்த வேண்டும். 10 முதல் 15 தடவை பேதியான பின்பு,வெறும் தண்ணியாக பேதியாகும்.
அதன் பிறகு தலைக்கு குளித்த பிறகு எலுமிச்சை சாறு கலந்த (Lemon tea) கருப்பு தேனீர் அருந்தவேண்டும். பிறகு நன்றாக குழைந்த சோற்றில் தயிர் அல்லது மோர் கலந்து உண்ணவும். நன்றாக ஓய்வு எடுத்த பிறகு பசி இருந்தால் பால் கலக்காத தேனீர் அருந்தலாம்.
இரவு உணவு
நன்றாக குழைந்த சோற்றில் புளி போடாத ரசம் விட்டு சாப்பிடலாம். இன்று ஒருநாள் மட்டும் காரம் மற்றும் மசாலா அறவே சேர்க்க கூடாது.