நல்வாழ்விற்குரிய வழிகளை முறையாகச் சித்தர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். நீரைக்காய்ச்சியும், நெய்யை உருக்கியும், மோரை நல்ல தண்ணீருடன் அளாவியும் பருகுக. கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது உறக்கத்தையும் பகற்போதி ல் பெண் ணோடு சேர்வதையும் தவிர்க்கவும். இலை. சருகு முதலியவை ஊறிக்கிடக்கின்ற தண்ணீரைப்பருகாது தவிர்க்கவும். கடும் வெய்யிலிலும் காலை வெய்யிலிலும் தலையைக் காட்டக் கூடாது. ஆற்றிலும், மழையிலும், இரவிலும், நிலவிலும், நள்ளிரவிலும், உறக்கம் விழித்தவுடனும் எண்ணெய் தேய்த்து முழுகுவதைத் தவிர்க்கவும். வெந்நீரில் எள் நெய் தேய்த்து அரப்பு தேய்த்து முழுகி வருக மூழ்கிய பின்னர் பத்திய உணவை உட்கொள்ளுதல் நல்வாழ்விற்கு வழிகோலுவதாகும். மேலும் மருத்துவ முறைப்படி என்னென்ன செய்யத்தக்கன வென்பதை அறிந்து செய்க. பழைய கறிவகைகள் அமுதம் போன்று உள்ளன என்றாலும் உட்கொள்ள நினையாதீர். அவை நஞ்சாகும். இம்முறை களைக் கையாண்டு வந்தால் கொடுங்கூற்றுவன் இவர்களிடம் நெருங்க அஞ்சுவான்.

how to prevent?