அனுபவம் வாய்ந்த வீட்டுக் குறிப்புகள்( Experienced Home Tips)
ஆண்மை அதிகரிக்க
தேவையான பொருட்கள்
1) கானாம் வாழை கீரை 100 கிராம்
2) தென்னம் பாளை 100 கிராம்
3) கொட்டைப் பாக்கு 100 கிராம்
4) முருங்கைப் பிசின் 100 கிராம்
பதப்படுத்தும் முறைகள்
1) கானாம் வாழைக் கீரையை நன்கு சுத்தப்படுத்தி துடைத்து நிழலில் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
2) தென்னம் பாளை 100 கிராம் நன்கு காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
3) முருங்கைப் பிசின் 100 கிராம் இடித்து சலித்து சூரணமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
செய்முறை
• கானாம் வாழை கீரை , தென்னம் பாளை, கொட்டைப் பாக்கு மற்றும் முருங்கைப் பிசின் ஆகிய அனைத்தையும் 100 கிராம் { சம அளவு } இருப்பது போல சலித்து எடுக்கவும்.
• தினமும் அதிகாலை மாலை என இரு வேளை ஒரு கிராம் அளவில் வாயில் போட்டு {ஒரு குவளை} 300 மில்லி லிட்டர் பசும் பாலில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும், விந்து முந்துதல் என்று பிரச்சனை நீங்கி போகும்.
பயன்கள்
1) விந்து அதிகரிக்கும்
2) ஆண்மை பலப்படும்
3) வீரியம் கிடைக்கும்
4) ஆண்களுக்கு சிறந்த மருந்து