Erectile dysfunction can cause stress, relationship strain and low self-confidence. Erectile dysfunction is not typical of aging, though getting older can affect ability to achieve and sustain an erection.

Erectile dysfunction is the inability to get or keep an erection firm enough to have sexual intercourse. This problem is defined as persistent difficulty achieving and maintaining an erection sufficient to have sex. Men can have several types of issues including poor sex drive and problems with ejaculation. But ED refers specifically to trouble getting or keeping an erection.

Symptoms of  Erectile dysfunction

  • Erections that are too soft for sex.
  • Erections that are don’t last long enough for sex.
  • An inability to get an erection.
  • Blood flow
  • Nerve supply
  • Hormones

Lifestyle choices can contribute to Erectile dysfunction. Smoking, heavy drinking, and drug use disorder can damage the blood vessels and reduce blood flow to your penis.

விறைப்பு குறைபாடு என்றால் என்ன?

ஒரு ஆணுக்கு தன்னுடைய விறைப்புத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள ஆண்குறியில் போதுமான இரத்த ஓட்டம் பாய வேண்டும். அப்பொழுது தான் நரம்புகள் தொடர்ச்சியான தூண்டுதல்களை அனுப்ப முடியும். ஏனெனில் ஆணுறுப்பில் எலும்புகள் இல்லை. நரம்புகள் வழியாகத்தான் நரம்பு மண்டலத்திற்கு சிக்னல்கள் கடந்து செல்கிறது.

பிறகு மூளை கொடுக்கும் சிக்னலுக்கு தகுந்த மாதிரி ஆண்குறி விறைப்பை பெறுகிறது. எனவே விறைப்புத்தன்மைக்கு ஆண்குறியில் இரத்த ஓட்டம் பாய்வது மிகவும் முக்கியம். ஆனால் இந்த இரத்த ஓட்டம் சில காரணங்களால் தடைபடுகிறது. வயது காரணமாக தமனி இரத்தக் குழாய்கள் தடினமாதல், நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் புகைப்பிடித்தல், ஆல்கஹால் போன்ற பிரச்சனைகளால் இரத்த ஓட்டம் தடைபட்டு ஆண்குறியின் விறைப்புத்தன்மை குறைகிறது.

​​விறைப்பு குறைபாடு அறிகுறிகள்

  • விறைப்புத் தன்மையில் பிரச்சினையும்,
  • திடீரென விறைப்புத் தன்மையை பராமரித்தலில் சிக்கல் உண்டாகும்.
  • பாலியல் ஆசை குறைய ஆரம்பிக்கும்
  • விறைப்புத்தன்மை சில நாட்களுக்கு அல்லது 2 வாரங்களுக்கு மேல் இருக்கலாம்.

விறைப்புத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்படும் ஆண்கள் மன அழுத்தத்துடன் இருப்பதோடு, தன்னம்பிக்கை குறைந்தவராகவும் இருப்பர்.

இப்பிரச்சனை வர முக்கிய காரணம் போதிய இரத்த ஓட்டம் ஆணுறுப்பில் இல்லாதது தான்.

இதற்கு முன்மையான காரணம் தற்போதைய வாழ்க்கை முறை மாற்றமும், உணவு பழக்கவழக்கத்தில் உள்ள மாற்றங்களும் தான்.  உண்மையில் மது அருந்தினால், அது மைய நரம்பு மண்டலத்தில் இறுக்கத்தை உண்டாக்கி, பாலியல் உணர்ச்சிகளைப் பாதிக்கும். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் இரத்த நாளங்களை சுருங்க செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதோடு, பாலியல் வாழ்க்கை திருப்தியாக அமையாது.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது, விந்தின் வடிவத்துக்கும் இயக்கத்துக்கும் உதவக்கூடியது. தினமும் 75 கிராம் அல்லது ஒரு கைப்பிடி பாதாம் பருப்பு சாப்பிடுவது விந்தணுவை பலம்பெறச் செய்யும்.

கேரட் (சிகப்பு முள்ளங்கி)

இதில் இருக்கும் எல்-கார்னிடைன் (L-Carnitine) எனும் அமினோ அமிலம், நம் வளர்சிதை மாற்றத்துக்கும், விந்தணுவின் இயக்கத்துக்கும் நன்மை செய்யக்கூடியது. இதை வாரத்துக்கு மூன்று முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது ஆண் மலட்டுத்தன்மை போக்க உதவும்.

மலைப் பூண்டு

இதில் இருக்கும் அலிசின் (Allicin) ரத்த ஓட்டத்தை அதிகரித்து பாலியல் ஹார்மோன்களைத் தூண்டக்கூடியது; இது விந்தணுவுக்கு எந்த பாதிப்பும் வராமல் காக்கும். இதில் இருக்கும் செலினியம் (Selenium) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், விந்தணுவின் சீரான இயக்கத்துக்கு உதவுவது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களைச் சுட்டு சாப்பிடுவது விறைப்பு தன்மைக்கு உதவும்.

உலர் திராட்சை

இதில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால் ​​விறைப்பு தன்மை தூண்டப்படும்.