மதுமேகம் (இனிப்பு நீர்) என்றால் என்ன?
சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. கிரேக்கர்கள் இதை டயாபடிஸ் மெலிட்டஸ் என்று அழைத்துள்ளனர். டயாபடிஸ் என்றால், கிரேக்க மொழியில் நீருற்று என்று பொருள். அதிகப்படியான நீர், சிறுநீராகக் கழிவதால் இப்படி அழைத்தனர். மெலிட்டஸ் என்பதற்குத் தேன் போன்ற தித்திப்பு என்று அர்த்தம். ரத்தத்திலும் சிறுநீரிலும் இனிப்பு அதிகரிப்பதை இது குறிக்கிறது.
ஆனால் சித்த வைத்தியத்தில் நீரழிவு 20 வகையாக சித்தர்களால் வகைப் படுத்தப்பட்டுள்ளது.
இதை மதுமேகம் என்றும் இனிப்புநீர் என்றும் அழைப்பர். ஆங்கில மருத்துவத்தில் நீரழிவு 2 வகையாக மட்டுமே பார்க்கப் படுகிறது.
நீரழிவுக்கு காரணங்கள்
- அதிக உணவு உண்ணுதல்
- சோம்பி திரிதல்
- மனக்கலக்கம், அதீத கவலை
- பெற்றோர்களின் வழி வரும் பரம்பரை நோய்
- இனிப்பு சுவையை அதிகமாக சேர்த்துக்கொள்ளல்
- இரவு நேரப்பணி
- தூக்கமின்மை
- சுவை மிக்க மீன்கள்
- அதிக பால், நெய் பயன்படுத்துதல்
- அதீத கள் உண்ணுதல்
- அடிக்கடி இறைச்சி உண்ணுதல்
- இரசாயன உணவுகள்
சித்த வைத்தியத்தில் மதுமேக குறிகுணங்கள்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- உடல் வன்மை குறை
- நாவறட்சி
- ஆறாத ரணங்கள்
- இனிப்பை தேடுதல் போன்ற உணர்வு
- அதிக பசி
- உடல் உஷ்ணமாதல் (பித்தம்)
- மேகத்தினால் ஏற்படும் அரிப்பு
- உடல் எடை அதிகரித்தல்
- கண்பார்வை மங்குதல்
- சிறுநீரில் ஈயும், எறும்பும் மொய்த்தல்
- சிறுநீரை சூடாக்கும் போது தேன் வாசனை வருதல்
நீரழிவினால் ஏற்படும் அவஸ்தைகள்
- உடல் பருமன்
- உடல் வத்தி போதல்
- அதிமூத்திரம்
- சுக்கில விரயம்
- உடல் வெளுத்து போதல்
- நாக்கு உலர்ந்து போதல்
- வயிற்றில் காற்று புகுந்து கொள்ளல்
- உடலில் நச்சுத்தன்மை அதிகமாதல்
- ஆறாத புண்கள் ஏற்படுதல்
- சுவை குன்றி போதல்
- நுரையீரலில் கிருமி தொற்று
- மரணம்
நீரழிவுக்கு உகந்த யோக அப்பியாசங்கள்
- பிரணாயாமம்
- தனுராசனம்
- சுகாசனம்
- மயூராசனம்
- பச்சிமோத்தாசனம்
- பத்மாசனம்
- ஹலாசனம்
- சலபாசனம்
- சர்வாங்காசனம்
- அர்த்த மச்சேந்திராசனம்
ஆசனங்களின் பயன்கள்
- கணைய செல்கள் உயிர்ப்பித்துவரும்
- நரம்பு மண்டலங்கள் சரிவர செயல்படும்
- இரத்த ஓட்டம் சீராகும்
- உடலுக்கு சரியான ஓய்வு கிடைக்கும்
- கல்லீரல் பித்தத்தை சரிவர வெளியாக்கும்
நீரழிவுக்கு உகந்த சித்த வைத்திய மருந்துகள்
- ஆவாரை பஞ்சாங்க கசாயம்
- Agasthiar Contro Sugar
- Agasthiar Toner Up
- Agasthiar Diabetic Tablet
- Agasthiar Diab Tone
- Agasthiar Tribala Choornam
- நிலவேம்பு கசாயம்
- மதுமேக சூரணம்
- திரிபலா சூரண மாத்திரை
- சீந்தில் சூரணம்
- கடுக்காய் சூரணம்
- கீழாநெல்லி சூரணம்